நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் யோசனைக்கு நாட்டின் முப்பீட மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடந்த ஜூலை 31ஆம் திகதி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்களுடன் அமரபுர மற்றும் ராமஞ்ஞ நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களும் இணைந்து இந்த எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்த நடவடிக்கையை கைவிடுமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கக் கூடாது எனவும் குறித்த கடிதத்தில் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








