Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்

பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக முன்னெடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பொருளாதார மீட்பு நடவடிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உடன்படிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் மேலும் 400,000 குடும்பங்கள் இந்த நலன்புரித் திட்டத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, தற்போதைய மீள் ஆய்வுகளின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 4 இலட்சம் குடும்பங்கள் இத்திட்டத்திலிருந்து வெளியேற உள்ளன.

மேலும், 2028ஆம் ஆண்டின் இறுதிக்குள் ‘மிகவும் ஏழ்மையான’ பிரிவினரைத் தவிர மற்ற அனைவரும் இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை ஆகும்.

அதற்குப் பதிலாக 2030ஆம் ஆண்டிற்குள் இவ்வாறான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை வறுமையிலிருந்து மீட்பதே அரசாங்கத்தின் நீண்டகால நோக்கம்.

எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பயனாளிகளைக் குறைப்பது பொருத்தமானதா என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மக்களின் வருமானம் ஸ்தம்பித்திருக்கும் நிலையில், விலையேற்றம் காரணமாக 33 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இன்னும் வறுமையிலேயே வாடுவதாக உலக வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

வெறும் IMF நிபந்தனைகளுக்காக ஏழை மக்கள் நீக்கப்பட்டால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு