அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஈரானுடன் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்க விரும்பவில்லை என்று கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை அது முடிந்துவிட்டது. அவர்களுடன் பேசுவது நேரத்தை வீணடிக்கும் செயல். அவர்கள் பொய்யர்கள்,” என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்பினாலும், அது பயனற்ற முயற்சியாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் இந்தக் கருத்து, அமெரிக்கா–ஈரான் உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் வெளியாகியுள்ளதால், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.








