Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

3 months ago
in செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக்காலத்தில் மேற்கொண்ட லண்டன் பயணத்தின் போது அரச நிதி முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும், விசாரணைக் கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நீதிமன்றத்தில் அறிவித்தது.

இதையடுத்து, சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன, பயணச் செலவின் ஒரு பகுதி போக்குவரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த போக்குவரத்து வசதியை பிரித்தானிய அரசாங்கமே வழங்கியதாகவும் தெரிவித்து அதனை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் மீது, அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டதன் மூலம் அரசுக்கு ரூ.1.5 கோடிக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!
செய்திகள்

பேனாவுக்குள் தங்கம் வைத்து கடத்த முயன்றவர் கைது!

October 6, 2026
பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!
செய்திகள்

பசிலுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட காணி FCIDயினால் பறிமுதல்!

October 6, 2026
புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!
செய்திகள்

புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திலும் மனித உரிமை மீறல் அபாயம்; HRW எச்சரிக்கை!

October 6, 2026
Next Post
வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம்; மட்டக்களப்பு மாநகரசபை அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு