Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

அமெரிக்க தாக்குதலால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு!

2 months ago
in செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய (09) காலை 6.00 மணி நிலவரப்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதுடன், இது 1.03 சதவீத உயர்வாகும்.

அதேவேளை, பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், 1.01 சதவீத அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மேர்பன் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.57 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதுடன், 6.67 சதவீத பாரிய அதிகரிப்பும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், இலங்கை நேரப்படி நேற்றிரவு 10.00 மணியளவில் பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 80 அமெரிக்க டொலரை எட்டியிருந்தது.

இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமைந்துள்ள ஈரானின் சிரிக் மற்றும் பண்டர் அப்பாஸ் உள்ளிட்ட தெற்குப் பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தாக்குதல்கள், ஈரான் முன்னதாக கப்பல்கள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் இடம்பெற்றால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஈரான் இதுவரை உத்தியோகபூர்வ பதிலை வெளியிடவில்லை. எனினும், எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியாக பதிலடி வழங்கப்படும் என அந்நாட்டு மூத்த அதிகாரிகள் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!
செய்திகள்

பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்கும்போது வீட்டிலிருந்தே உணவும் குடிநீரும் எடுத்து செல்லுங்கள்; அதுவே அவர்களுக்கு தண்டனை!

August 23, 2026
நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை
செய்திகள்

நீதிபதிகள் நுழையும் வழியாக அனுமதிக்கப்பட்ட சிறுமி துஷ்பிரயோக குற்றச்சாட்டு தேரர்; எழுந்துள்ள சர்ச்சை

August 23, 2026
ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!
செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!

August 22, 2026
மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

August 22, 2026
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!
செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!

August 22, 2026
கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!
செய்திகள்

கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!

August 22, 2026
Next Post
டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!

டெங்குவுடன் அதிகரிக்கும் தோல் நோய்கள்; சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு