கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த யாத்திரிகர் ஒருவர் இன்று (12) காலை பாணமை பகுதியில் திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நற்பிட்டிமுனை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவ இடத்துக்கு லாகுகலை பிரதேசத்தின் பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த 8ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த மற்றொரு யாத்திரிகரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








