Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலாகொட பகுதியில், 88 வயதுடைய முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவரது சடலம் நேற்று (11) இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 8.00 மணியளவில், வீட்டின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், உயிரிழந்தவரின் 48 வயதுடைய இளைய மகன் சந்தேகத்தின் பேரில் தங்காலை தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் இடம்பெற்ற தினம் காலை அவர் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்ததாகவும், கைது செய்யப்பட்டபோது கடுமையான மதுபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவு (SOCO) அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், கொலைக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து தங்காலை தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு
செய்திகள்

ரயில்வே ஊழியர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

August 26, 2026
யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது
செய்திகள்

யால தேசிய பூங்காவின் 2 வளாகங்கள் மூடப்பட்டது

August 26, 2026
நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video
செய்திகள்

நேபாள வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு; 403 பேர் மாயம்-video

August 26, 2026
“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்
செய்திகள்

“நவோதயாகம” வீட்டுத்திட்டம் நாளை மறுதினம் மக்கள் கையில்

August 26, 2026
நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்
செய்திகள்

நெல் ஆலை உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் வட்டியில்லா கடன்

August 26, 2026
கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்
செய்திகள்

கெஹல்பத்ரா பத்மே பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

August 26, 2026
Next Post
மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

மாணவர்கள் முழுக் கை, முழுக் கால் ஆடையுடன் பாடசாலைக்கு வர அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.