Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

3 months ago
in செய்திகள்

சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திணைக்களத்தின் தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையொட்டி, பத்தரமுல்லையில் அமைந்துள்ள வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

அகில இலங்கை வனஜீவராசிகள் கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிக்கையில், தற்போதைய அதிகாரிகளுடன் எவ்வித ஆலோசனையும் இன்றி சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை திணைக்களத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நியமன முறைமையில் உள்ள குறைபாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை பலமுறை கோரியிருந்த போதிலும், அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நியமனங்கள் கள உதவியாளர்கள், வனவிலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், பிராந்திய உதவியாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் சேவை மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பில் ஊழியர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைப்பது தொடர்பான இறுதி முடிவை எடுப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு
செய்திகள்

நாளை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு பூட்டு

October 11, 2026
ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!
செய்திகள்

ஜிபூட்டி கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்து – 15 சிறுவர்கள் உட்பட 109 பேர் பலி; 116 பேர் மாயம்!

October 11, 2026
AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

AI மூலம் போலி பணப் பரிமாற்ற ரசீதுகள் தயாரித்து மோசடி!; விற்பனையாளர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 11, 2026
சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்
செய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்

October 11, 2026
ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

October 11, 2026
குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!
செய்திகள்

குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!

October 11, 2026
Next Post
திருகோணமலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விசேட அதிரடிப்படை வீரரைத் தேடும் பணி தீவிரம்!

திருகோணமலையில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விசேட அதிரடிப்படை வீரரைத் தேடும் பணி தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு