எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனுவில் முன்வைக்கப்பட்ட விடயங்களை விரிவாக ஆராய்ந்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
இவ்வருட உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளில் தோற்றவுள்ள மாணவர்கள் குழுவொன்றினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, பரீட்சையை ஒத்திவைக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்காத நிலையில், திட்டமிட்ட கால அட்டவணையின் அடிப்படையில் பரீட்சை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.








