Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2 months ago
in செய்திகள்

சிறைச்சாலைகளில் பணியாற்றி வரும் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் பலர் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் 2025ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, ஆண் சிறைச்சாலை அதிகாரிகளில் 77 சதவீதத்தினருக்கும், பெண் அதிகாரிகளில் 56 சதவீதத்தினருக்கும் உடலியல் பலவீனங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்த தகவல்கள், தொற்றா நோய்கள் தொடர்பாக நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் கண்டறியப்பட்டதாகவும், இது கவலைக்கிடமான சுகாதார நிலையை வெளிப்படுத்துவதாகவும் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஆண் சிறைச்சாலை அதிகாரிகளில் சுமார் 29 சதவீதம் பேர் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாகவும், 26 சதவீதம் பேர் வெற்றிலை அல்லது பாக்கு பயன்படுத்துபவர்களாகவும் உள்ளனர். பெண் அதிகாரிகளில் 5 சதவீதம் பேர் பாக்கு பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆண் அதிகாரிகளிடையே மது அருந்தும் பழக்கமும் அதிகளவில் காணப்படுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த பழக்கவழக்கங்கள் காரணமாக இதய நோய்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் வாய் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார பரிசோதனைகளின் அடிப்படையில், ஆண் அதிகாரிகளில் 28 சதவீதம் பேருக்கும், பெண் அதிகாரிகளில் 16 சதவீதம் பேருக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஆண் மற்றும் பெண் அதிகாரிகளில் தலா 14 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண் அதிகாரிகளில் 13 சதவீதம் பேருக்கு கொலஸ்ட்ரால் அதிகரிப்பு காணப்பட்டதுடன், சிலருக்கு சிறுநீரக செயல்பாட்டுக் குறைபாடுகளும் பதிவாகியுள்ளன.

சிறைச்சாலை அதிகாரிகளின் சுகாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ

கோட்டாபயவின் வக்கீலாக ஆஜரானார் நாமல் ராஜபக்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.