Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

2 months ago
in மட்டு செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் அ. தர்சினி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின்போது, பிள்ளையான் நிகழ்நிலை (வீடியோ) ஊடாக ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவரது சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள அவர், மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் கல்லடி காணித் தகராறு தொடர்பான வழக்கிலும் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

விசாரணையின்போது, தனது பெற்றோரைச் சந்திக்க அனுமதி வழங்குமாறு பிள்ளையான் சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவருக்கான உணவு சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்படும் போது எதிர்கொள்ளப்படும் சிரமங்கள் குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பில், சிறைச்சாலை நடைமுறைகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

மேலும், பாதுகாப்பு மற்றும் நீண்ட தூரப் பயண சிரமங்களை கருத்தில் கொண்டு, பிள்ளையானை வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அவரது சட்டத்தரணிகள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர். எனினும், வெலிக்கடை சிறைச்சாலையில் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கேயே தொடர்ந்து தடுத்து வைப்பது பொருத்தமானது என்றும் அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கின் மேலதிக விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!
செய்திகள்

சீனாவில் நடைபெறும் சர்வதேச விஞ்ஞான நிகழ்வுக்கு இலங்கை அணித்தலைவராக பட்டிருப்பு ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் தெரிவு!

September 17, 2026
மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி விபத்து; பெண் உயிரிழப்பு

September 17, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” தொனிப்பொருளில் வாகரையில் மரநடுகை

September 16, 2026
மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு
காணொளிகள்

மண் படிவ மாதிரி பரிசோதனைக்கான குருக்கள்மடம் அகழ்வாய்வு ஒத்திவைப்பு

September 16, 2026
Next Post
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு