வாகரை – “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரனின் ஆலோசனையின் பேரில் இடம்பெற்று வரும் இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, சுற்றாடல் மற்றும் மரநடுகை தின நிகழ்வு இன்று (16) இடம்பெற்றது.
இதன்போது பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா மற்றும் பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய வளாகம் ஆகிய பகுதிகளில் பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றாடல் பாதுகாப்பையும் பசுமையான எதிர்காலத்தையும் வலியுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரன், சபைச் செயலாளர் சி. புவனதாசன், கால்நடை வைத்தியர் எம்.எம். உறூஜ், ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












