இரத்மலானை பகுதியில் உள்ள ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டை இலக்காகக் கொண்டு இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








