ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (10) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தொடர்பாக அவர் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








