மிகவும் அரிய வானியல் நிகழ்வான முழு சூரிய கிரகணம் இன்று (12) நிகழவுள்ளது. ஆனால், இலங்கை நேரப்படி இரவு 11.16 மணியளவில் இடம்பெறுவதால், இலங்கையில் இருந்து இதனைப் பார்க்க முடியாது.
இந்த கிரகணம் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின், போர்த்துகல் மற்றும் வடக்கு ரஷ்யாவின் சில பகுதிகளில் முழுமையாகத் தென்படும். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளிட்ட சில பிராந்தியங்களில் பகுதி சூரிய கிரகணமாகக் காணப்படும்.
இதேவேளை, 2027 ஆகஸ்டிலும் முழு சூரிய கிரகணம் நிகழவுள்ள போதிலும், அதுவும் இலங்கையில் இருந்து தென்படாது என வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.








