Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடுகள்?

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் ரூபா நிதி முறைகேடுகள்?

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் பல்கலைக்கழகங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி வெளிநாடுகளுக்குச் சென்ற விரிவுரையாளர்களிடமிருந்து 30 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மீட்டெடுக்க வேண்டியுள்ளதாக அரச நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவான COPE தெரிவித்துள்ளது.

இந்த நிலுவைத் தொகையை மீட்டெடுப்பதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்குமாறு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பதவி விலகி, பின்னர் மீண்டும் பணியில் இணைந்த விரிவுரையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட 3,633,900 ரூபாவை மீட்டெடுக்குமாறும் COPE உத்தரவிட்டுள்ளது.

மேலும், வருகைப் பதிவுக் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட விடுமுறையை விட மேலதிகமாக 5 முதல் 83.5 நாட்கள் வரை விடுமுறை பெற்ற 38 கல்விசாரா ஊழியர்களுக்கு 99,181,457 ரூபா மேலதிக சம்பளமாக வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த தொகையை மீட்டெடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பல்கலைக்கழக அதிகாரிகளின் கல்வித் தகைமைகள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆவணங்கள் காணாமல் போனமைக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் 2004ஆம் ஆண்டு சுனாமி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களைக் காரணமாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், இந்த விளக்கங்களை நிராகரித்த COPE தலைவர் நிஷாந்த சமரவீர உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் பயோமெட்ரிக் கைரேகை வருகைப் பதிவைக் கட்டாயமாக்குவதற்கும், பல்கலைக்கழக நிர்வாக முறைகேடுகளைக் கட்டுப்படுத்த சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவின் பயணத் தடை எச்சரிக்கை; 23 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!
செய்திகள்

அமெரிக்காவின் பயணத் தடை எச்சரிக்கை; 23 நாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!

November 10, 2026
1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!
செய்திகள்

1990 சுவசெரிய சேவைக்கு இந்தியாவிடமிருந்து 100 புதிய அம்புலன்ஸ்கள்!

November 10, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தேசிய நீர்வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது!

November 10, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!
செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்!

November 10, 2026
பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!
செய்திகள்

பெந்தோட்டை கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை அலையில் சிக்கி உயிரிழப்பு!

November 10, 2026
போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காசாவில் 250 ஜோடிகளுக்கு பிரமாண்ட கூட்டுத் திருமணம்!
உலக செய்திகள்

போர் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் காசாவில் 250 ஜோடிகளுக்கு பிரமாண்ட கூட்டுத் திருமணம்!

November 10, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு