Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களில் பிற வாகனங்களை நிறுத்தி, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் ஒதுக்கப்பட்ட பேருந்து தரிப்பிடங்களில் பிற வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் பிரதான வீதியில் நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உருவாகிறது.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளுடன் பயணிக்கக்கூடிய பேருந்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்து தரிப்பிடங்கள் எவ்வித தடையும் இன்றி பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பேருந்து தரிப்பிடத்தை அணுகும் திசையில் 30 மீற்றர் வரையிலும், தரிப்பிடத்தை கடந்த பின்னர் 15 மீற்றர் வரையிலும் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, Bus Bays கொண்ட பேருந்து தரிப்பிடங்களில், அவற்றை அணுகும் பகுதியில் 15 மீற்றர் வரையிலும், வெளியேறும் பகுதியில் 10 மீற்றர் வரையிலும் பிற வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் வசதியாக, இந்த விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது
செய்திகள்

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

September 29, 2026
உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்
செய்திகள்

உதய கம்மன்பில நிரபராதி என தீர்ப்பளித்தது நீதிமன்றம்

September 29, 2026
Next Post
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு