ஓமானில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும், “சமித்புர சது” என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடைய நபர் இன்று (18) காலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
28 வயதான குறித்த நபர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமானில் கைது செய்யப்பட்ட பின்னர், சட்ட நடவடிக்கைகளுக்காக அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








