Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய உறவினரான 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொஹிதீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸில் தங்கியுள்ள திட்டமிட்ட குற்றக் குழு உறுப்பினரான “கூடு அஞ்சு” என்பவர் இந்தக் கொலையை வழிநடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (17) காலை மற்றும் நண்பகல் வேளைகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 21 வயதான ஆண் ஒருவரும், 23 வயதான பெண் ஒருவரும் 25 கிராம் 840 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று சந்தேகநபர்கள் 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து கடந்த 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இரத்மலானை பகுதியில் அண்மையில் “கூடு அஞ்சு”வின் நெருங்கிய சகா ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்
செய்திகள்

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்

October 3, 2026
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
Next Post
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு