Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

43 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என சமூக நீதிக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சம்பிக்க ரணவக்க, சஹ்ரானின் தீவிரவாதக் குழுவின் தலைமைப் பொறுப்பை கல்முனையைச் சேர்ந்த புதிய ஒருவர் ஏற்றுள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் வழக்கில் இருந்து விடுதலையான சிலர் குறித்த குழுவில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்குவைத்து போலியான சமூக வலைத்தளப் பக்கங்கள் ஊடாக திட்டமிட்ட இனவாதப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சம்பிக்க ரணவக்கவின் இந்தக் கருத்துக்கள் மேலும் இனவாத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது என சமூக நீதிக் கட்சி தெரிவித்துள்ளது.

எனவே, சம்பிக்க ரணவக்கவை அரசாங்கம் உடனடியாக அழைத்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அந்தக் கட்சி கோரியுள்ளது.

அவர் தெரிவித்த கருத்துக்கள் உண்மையானவை எனில், அது தொடர்பான விசாரணைகளை உடனடியாக முன்னெடுத்து, அவ்வாறான தீவிரவாதக் குழுக்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என விசாரணைகளில் தெரியவருமாயின், அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக நீதிக் கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
Next Post
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு