யாழ்ப்பாணம், இணுவில் காரைக்கால் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (03) இரவு ரயிலுடன் மோதியதில் இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்துள்ளார்.
தனது வீட்டுக்கு முன்பாக உள்ள ரயில் தண்டவாளத்தில் ஹெட்செட் அணிந்து பாடல் கேட்டவாறு படுத்திருந்தபோதே, அவ்வழியாக வந்த ரயிலுடன் அவர் மோதியுள்ளார்.
இதில் படுகாயமடைந்து கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட அவர், உடனடியாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








