Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

33 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி உஸ்பெகிஸ்தான் பெண்ணை நாட்டுக்கு அழைத்து வந்து, அவரை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், குற்றவாளிக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், மாதாந்தம் 1,500 அமெரிக்க டொலர் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு அல்லது குழந்தைகளைப் பராமரிக்கும் பணி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் பேரில் குறித்த பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்த பின்னர், நீர்கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பாலியல் சேவைக்காக பயன்படுத்தப்பட்டதாகவும், பின்னர் வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டு அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டதாகவும் வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் இரகசியமாக தனது தாயாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, உஸ்பெகிஸ்தான் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு அவரை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட வங்கி அறிக்கைகள் உள்ளிட்ட சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, பாலியல் சேவைக்காக செலுத்தப்பட்ட பணத்தின் ஒரு பகுதி குற்றவாளியின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தமை தொடர்பான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குற்றம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட கொழும்பு மேல் நீதிமன்றம், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையையும் 10,000 ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு