Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நீர் வழங்கல் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், மக்களின் தேவைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும் தனியான பிராந்திய நிர்வாக கட்டமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் குடிநீர் வசதியை விரிவுபடுத்த வேண்டிய தேவை தொடர்ந்து காணப்படுவதாகவும், குறிப்பாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கலுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

2026 ஜனவரி மாத தரவுகளின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 8,500 குடும்பங்களுக்கு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பல பகுதிகளுக்கு நீர் இணைப்புகளை விரிவுபடுத்தும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதாகவும், இதனைக் கருத்திற்கொண்டு குடிநீர் வழங்கல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, காலதாமதமின்றி முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என துரைராசா ரவிகரன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!
செய்திகள்

அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!

October 5, 2026
ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 5, 2026
இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை
செய்திகள்

இடியுடன் மழை – பல மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்கள எச்சரிக்கை

October 5, 2026
இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!
செய்திகள்

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 7.4% வீழ்ச்சி!

October 5, 2026
ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்
செய்திகள்

ஞானசார தேரரும் நாமலும் ஒரே சிறையில்

October 5, 2026
ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!
செய்திகள்

ஹட்டன்–சாஞ்சிமலை வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர்; ஒருவர் காயம்!

October 5, 2026
Next Post
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு