அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலம் தொடர்பான ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கிய “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் திருத்தலமும்” என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கலாபூஷணம், ஆய்வார்வலர் நா. நவநாயகமூர்த்தியால் எழுதப்பட்ட இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு வீரமுனை சுவிஸ் கிராண்ட் மஹாலில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு முன்னதாக ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தில் நூல் வைத்து விசேட பூஜை நடத்தப்பட்டதுடன், பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
விழாவில் அரச அதிகாரிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கல்வியாளர்கள், சமயப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தேசிய பரீட்சைகளில் சித்தியடைந்த வீரமுனை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நூலாசிரியர் சுகவீனம் காரணமாக நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத நிலையில், அவரது பாரியார் வீரமுனை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டார்.




















