விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தில், மெத்தம்பெட்டமைனை போதைப்பொருள் பட்டியலில் சேர்த்தல், அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கான தண்டனைகள் தொடர்பான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்யும்போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.







