சிறுபோகப் பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக அதிகபட்சம் ரூ.25 இலட்சம் வட்டியில்லா கடன் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அரசாங்கம் இதுவரை 45,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல்லை கொள்முதல் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதுடன், சிறுபோகப் பருவ நெல் கொள்முதலை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக ரூ.75 இலட்சம் பெறுமதியான மேலதிக துணை மதிப்பீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் அனுமதி வழங்கியதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.







