Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயத்தின் சித்திரத்தேர்த்திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த ஆலயமானது கதிர்காமத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பைக்கொண்டதாக ஆலய வரலாறுகள் கூறுகின்றன.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது தமிழர்களின் வழிவந்த மரபில் நடத்தப்பட்டுவருகின்றது.
கடந்த 19ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.
பத்து தினங்கள் நடைபெற்றுவரும் இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சத்தில் தினமும் சுவாமி உள் வீதியுலா,வெளி வீதியுலா நடைபெற்றுவருவதுடன் தம்ப பூஜை கொடித்தம்ப பூஜை என்பன நடைபெற்றுவருகின்றது.

ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் அரோகரா ஓசையுடன் அடியார்கள் தேரினை இழுத்துவந்த காட்சி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

தேர் உற்சவத்தினை தொடர்ந்து பச்சைத்திருவிழா நடைபெற்றதுடன் சுவாமிக்கு பச்சை நீர் இறைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்றது.இந்த உற்சவத்தில் நாடெங்கிலும் இருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு
காணொளிகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு

October 12, 2026
சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
Next Post
திபெத்தில் அணை உடைப்பு; நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

திபெத்தில் அணை உடைப்பு; நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு