Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பொலிஸாரால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான (Police Clearance Certificate) தரவுக் கட்டமைப்பு மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் குறித்த சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல், அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இணையவழி தரவுக் கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த தரவுக் கட்டமைப்பு கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி நண்பகல் 12.50 மணி முதல் செயலிழந்திருந்த நிலையில், இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது சேவை மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான புதிய விண்ணப்பங்களை வழமைபோன்று இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.

எனினும், தரவுக் கட்டமைப்பு செயலிழந்ததன் காரணமாக ஆகஸ்ட் 20ஆம் திகதி முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட சில விண்ணப்பங்கள் தரவுக் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஆகஸ்ட் 20ஆம் திகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணையவழி ஊடாக பொலிஸ் நற்சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மீளச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைத்த பின்னர், பொலிஸ் நற்சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்காக செலுத்தப்பட்ட 5,100 ரூபாய் கட்டணம், விண்ணப்பதாரர் பணம் செலுத்திய ATM அட்டையுடன் தொடர்புடைய கணக்கில் மீள வரவு வைக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!
செய்திகள்

இலஞ்சக் குற்றச்சாட்டு; முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்சஆணையத்தால் கைது!

October 12, 2026
உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்
செய்திகள்

உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’; கடும் வெப்பம், வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

October 12, 2026
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!
செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சந்திம வீரக்கொடி, சாமர சம்பத் தசநாயக்க முன்னிலை!

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்‌ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு; மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு

October 12, 2026
Next Post
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு