Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கோரி, அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் சுகாதார அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பின்னர் ரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றறிக்கையில் மருந்தாளர்களுக்கான கொடுப்பனவு “மேலதிக நேர கொடுப்பனவுகள்” என திருத்தப்பட்டிருந்த போதிலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் மருத்துவச் சேவையின் தலையீட்டால் அது ரத்து செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பிரச்சினைக்கு இதுவரை அதிகாரிகளால் திருப்திகரமான தீர்வு வழங்கப்படாததால், ரத்து செய்யப்பட்ட சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மனிதாபிமானக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அனைத்து மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் மனநல வைத்தியசாலைகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலக்களிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வைத்தியசாலைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய மருந்தக சேவைகளை தொடர்வதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், பணிப்புறக்கணிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி!

October 12, 2026
ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!
செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் வழக்கு; மஹிந்த கஹந்தகம ஒக்டோபர் 26 வரை விளக்கமறியலில்!

October 12, 2026
Next Post
மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு