கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட ப்ரிமா சிலோன் தனியார் நிறுவனம் மற்றும் செரண்டிப் ஆலை ஆகிய நிறுவனங்கள் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 17 ரூபாயால் அதிகரித்துள்ளன.
இந்த புதிய விலை அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்படக்கூடும் என நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர்.








