Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

வெனிசுலாவின் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்பை இலக்கு வைக்கும் அமெரிக்கா; டிரம்ப் தகவல்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வெனிசுலாவின் சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பை மேம்படுத்துவதற்கான மிகப்பெரிய ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது உலக வரலாற்றில் இதுவரை இடம்பெற்ற மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெனிசுலா அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 65 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளத்தைக் கொண்ட 17 எண்ணெய் வயல்களை அபிவிருத்தி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமாகும்.

எனினும், குறித்த அளவு வெனிசுலாவின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் வெனிசுலாவின் பெட்ரோலியத் துறையில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை ஈர்க்க முடியும் எனவும், அந்நாட்டு அரசாங்கத்திற்கு 209 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பந்தம் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்பட்டால், நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வெனிசுலாவின் பாரிய எண்ணெய் வளங்களை அபிவிருத்தி செய்வதில் அமெரிக்காவுக்கு முக்கிய பங்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
செய்திகள்

இசைப் பாடல்களுக்கான காப்புரிமைக் கட்டண நடைமுறைகள் தற்காலிக இடைநிறுத்தம்!

October 13, 2026
2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு
செய்திகள்

2027இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக சரியும்; IMF கணிப்பு

October 13, 2026
15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!
செய்திகள்

15 இலட்சம் மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு!

October 13, 2026
பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்
செய்திகள்

பெற்றோரின் உடல் நிலையை காரணம்காட்டி பிணை கோரிய நாமல்

October 13, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!
செய்திகள்

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

October 13, 2026
Next Post
எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!

எருமைதீவில் இரவோடு இரவாக கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி; மக்கள் தடுத்து நிறுத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு