Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!

பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலன்னறுவை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதால், விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் கவலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் தற்போது அதன் மொத்தக் கொள்ளளவில் சுமார் 36 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.

மின்னேரிய நீர்த்தேக்கத்தின் முழுமையான கொள்ளளவு 110,000 ஏக்கர் அடியாக உள்ள நிலையில், தற்போது சுமார் 40,000 ஏக்கர் அடி நீர் மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இம்முறை சிறுபோக நெற்செய்கைக்காக மின்னேரிய நீர்த்தேக்கத்திலிருந்து வயல்களுக்கு நீர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்னும் இரண்டு நாட்களில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளது.

116,000 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்ட பராக்கிரம சமுத்திரத்தில் தற்போது சுமார் 63,000 ஏக்கர் அடி நீர் காணப்படுவதுடன், இது அதன் மொத்தக் கொள்ளளவில் சுமார் 56 சதவீதமாகும்.

பராக்கிரம சமுத்திரத்திலிருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் விநியோகிக்கும் நடவடிக்கை ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று, 21,600 ஏக்கர் அடி கொள்ளளவைக் கொண்ட கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது.

தற்போது கிரித்தலே நீர்த்தேக்கத்தில் 8,500 ஏக்கர் அடிக்கும் குறைவான நீரே எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், சிறுபோக நெற்செய்கைக்காக அங்கிருந்து நீர் திறந்துவிடும் நடவடிக்கையும் நிறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், எதிர்வரும் காலங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர் விநியோகம் தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வின் சுமையைக் குறைக்க இதுவரை 110 பில்லியன் ரூபாய் நிவாரணம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

October 13, 2026
மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு ஐவர் படுகொலை வழக்கு; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்!

October 13, 2026
யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒக்டோபர் 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

October 13, 2026
கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!
செய்திகள்

கிராண்ட்பாஸ் மஹவத்த பகுதியில் தீப்பரவல்; 15 தற்காலிக வீடுகள் முற்றாக எரிந்து நாசம்!

October 13, 2026
அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்
செய்திகள்

அரச சொத்துக்கள் முகாமைத்துவச் சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம்

October 13, 2026
“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்
செய்திகள்

“விஷம் அருந்தி உயிரை மாய்க்கப்போவதாக ஞானசார தேரர் கூறினார்!”; பௌத்த துறவி அதிர்ச்சித் தகவல்

October 13, 2026
Next Post
நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!

நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு