ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாசித், எதிர்வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி தனது எம்பி பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சியின் உள்ளக இணக்கப்பாடுகள் மற்றும் தீர்மானங்களுக்கு அமைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், இராஜினாமாவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அரசியல் களத்தில் அதிகரித்துள்ளது.







