Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை;  20 வயது இளைஞர் கைது!

13 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; 20 வயது இளைஞர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

13 வயது சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிங்கிரிய – ஹிருவெல்பொல பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸாரின் விசாரணைகளின்படி, சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில், சிறுமி தனது பாட்டி, சித்தி மற்றும் சகோதர, சகோதரிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் அதே வீட்டில் வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் வேறு எவரும் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்தேகநபர் தன்னைத் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, வெளிநாட்டிலிருந்து கடந்த மாதம் முதலாம் திகதி நாடு திரும்பிய தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து தாய் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து
செய்திகள்

சவுதிக்கு செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் இரத்து

October 16, 2026
மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்
செய்திகள்

மூட்டை முடிச்சை கட்டி வெளியேறினர் தேரர் குழுவினர்

October 16, 2026
கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!
செய்திகள்

கல்முனையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 119 குடும்பங்களிடம் விசாரணை!

October 16, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக 167,569 வாகனங்கள் விநியோகம்!

October 16, 2026
மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!
செய்திகள்

மட்டு நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் சுலோகங்களை ஏந்தி நின்றமீனவர்கள்!

October 16, 2026
ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க வருபவர்களை இலக்கு வைத்து நடைபெறும் மோசடி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

October 16, 2026
Next Post
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு