Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

மட்டக்களப்பில் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

2 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக சுமார் 9,000 குடும்பங்களுக்கு தற்போது பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள நீர்ப்பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் வகையில், மக்களின் அத்தியாவசிய குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பேரில், அமைச்சர் சுசில் ரணசிங்க தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று (01) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மாவட்டத்தில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், பொதுமக்களின் குடிநீர் தேவையை உடனடியாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய குடிநீர் தேவையை தொடர்ந்து வழங்குவதற்காக தனியார் துறையின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும், மாவட்டத்தின் நீர்வளங்களைப் பாதுகாத்தல், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையைத் தடுப்பதற்கான நிலையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.

தற்போதைய குடிநீர் நெருக்கடிக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதுடன், மாவட்ட மக்களின் எதிர்கால குடிநீர் தேவையை உறுதிப்படுத்தும் வகையில் நீண்டகால நீர் வழங்கல் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே.எம். அப்துல்லாஹ், பொறியியலாளர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், துறைசார் நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
செய்திகள்

ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை

October 18, 2026
சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்
செய்திகள்

சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்

October 18, 2026
திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

October 18, 2026
அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில
செய்திகள்

அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில

October 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

October 17, 2026
சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி
செய்திகள்

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதி

October 17, 2026
Next Post
96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

96 அமெரிக்க டொலர்களை தாண்டிய கச்சா எண்ணெய் விலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு