Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு ஜூரி சபையால் வழங்கப்பட்ட விடுதலைத் தீர்ப்பை ரத்து செய்துள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம், வழக்கை மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முதலிலிருந்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்க்காப்பாளர் லக்ஷ்மணன் உயிரிழந்தனர்.

இந்தக் கொலை தொடர்பில் கடற்படைச் சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், 2016ஆம் ஆண்டு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பி. சசி மகேந்திரன் மற்றும் அமல் ரனராஜா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, குறித்த விடுதலைத் தீர்ப்பை ரத்து செய்துள்ளது.

வழக்கின் முக்கிய அரசு தரப்பு சாட்சியான சம்பத் மனம்பேரியின் வாக்குமூலத்தை மதிப்பீடு செய்யும் போது, ஜூரி சபைக்கு உரிய சட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், 2016ஆம் ஆண்டு நள்ளிரவு 12.50 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டமை தொடர்பிலும் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கு எதிரான விசாரணையைத் தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கருதியுள்ளது.

இதனால், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் புதிதாக விசாரணைக்கு வரவுள்ளது.

எவ்வாறாயினும், புதிய விசாரணையின் முடிவிலேயே குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதி சட்டத் தீர்மானம் எடுக்கப்படும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

October 18, 2026
நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ
செய்திகள்

நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ

October 18, 2026
எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்
செய்திகள்

எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்

October 18, 2026
யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

October 18, 2026
கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்
உலக செய்திகள்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்

October 18, 2026
பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது
செய்திகள்

பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது

October 18, 2026
Next Post
பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

பொலிஸ் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கிச் சூடு; 3 வாள்கள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு