Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

எல்-நினோ தாக்கம்; பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எல்-நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

எல்-நினோ தாக்கத்தால் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், காலநிலை மாற்றத்தால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஆலோசிக்கப்பட்டது.

தற்போது ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் தடையற்ற நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றமும் கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும், பெரும்போகத்தை ஆரம்பிப்பது தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்கும் ஊடகவியலாளர் சந்திப்பை செப்டம்பர் 4ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இதனுடன், எல்-நினோ தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ‘சூம்’ தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

விசேட அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!
செய்திகள்

ரவிராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; 2016 தீர்ப்பு இரத்து, மீண்டும் விசாரணை!

September 3, 2026
மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!
செய்திகள்

மட்டக்குளியில் 1000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது!

September 3, 2026
போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!
செய்திகள்

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தமிழ் ஊடகவியலாளர்களின் நெருக்கடிகள் தீரவில்லை!

September 3, 2026
வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!
செய்திகள்

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

September 3, 2026
பாளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

பாளையில் புலிமுகாம் இருப்பதாக செய்தி பரப்பியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

September 3, 2026
முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு
செய்திகள்

முதியோர்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று இன்று வங்கிகளுக்கு

September 3, 2026
Next Post
வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

வெல்லம்பிட்டியில் 130 இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் இளைஞர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு