Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

3 years ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது.

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடது கையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது.

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய நீதிமன்றம் கட்டளையிட்டது.

பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.

வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிறுமியின் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், லக்சன் செல்வராஜா ஆகியோர் முன்னிலையாகினர்.

தொடர்புடையசெய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

June 17, 2026
ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி
செய்திகள்

ஆஷு மாரசிங்க எமது கட்சி உறுப்பினர் அல்ல என அறிவித்தது ஐக்கிய தேசியக் கட்சி

June 17, 2026
யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி
செய்திகள்

யாழில் இரு தீவுகளை இணைத்து மேம்பாலம் கட்ட ஒருங்கிணைப்பு குழு அனுமதி

June 17, 2026
யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!
செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் இளம்பெண் அவமானப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு!

June 17, 2026
இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!
செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

June 17, 2026
Next Post
தனுஷ்க குணதிலக விடுதலை!

தனுஷ்க குணதிலக விடுதலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு