Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு நீதிபதி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது; புதுத் தகவல்கள் கூறுகிறார் நீதி அமைச்சர்!

பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு நீதிபதி கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது; புதுத் தகவல்கள் கூறுகிறார் நீதி அமைச்சர்!

3 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நேற்றைய தினம் தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.

சிறிலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா இந்த கடிதத்தை கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஐந்து வழக்குகளுக்கு அவர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால் ஒரு நீதிபதியாக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சரவணராஜாவுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் செய்திருந்ததாகவும் அவரது வாகனத்தை விற்பனை செய்துள்ளதாகவும் விஜேயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

சரவணராஜாவின் கொழும்புக்கான பயணத்தின் போது அவர் மேற்குலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்துள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் தாம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞர்; ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

September 21, 2026
அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!
செய்திகள்

அனோஜன் வழக்கு – பெற்றோரை நேரில் சந்தித்த ஜனாதிபதி, பொதுமன்னிப்புக்கு முழு ஆதரவு உறுதி!

September 21, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
Next Post
போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தமிழ் அரசுக் கட்சி!

போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தமிழ் அரசுக் கட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு