Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!

இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் குறித்த பைகள் கிடைக்கவில்லை என காலி தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பிரியந்த அட்டப்பட்ட தெரிவித்துள்ளார்.

காலி (கராப்பிட்டிய) தேசிய வைத்தியசாலை கொலோஸ்டமி பைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்களிடம் நன்கொடை கோரியதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியிருந்தன. இதனால், நோயாளிகள் மாதாந்தம் சுமார் 20,000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக இலங்கை ஊடகம் ஒன்றிடம் நேற்று (25) கருத்துத் தெரிவித்த வைத்தியர் பிரியந்த அட்டப்பட்ட, நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் தற்போது கொலோஸ்டமி பைகள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் கொலோஸ்டமி பைகளை கொள்வனவு செய்வதற்காக இரண்டு நிறுவனங்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்திருந்ததாகவும், ஒரு நிறுவனம் ஒரு பைக்கு சுமார் 9,000 ரூபாயையும் மற்றைய நிறுவனம் சுமார் 3,000 ரூபாயையும் விலையாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் முன்வைக்கப்பட்ட பைகள் இலங்கையில் இதற்கு முன்னர் பயன்படுத்தப்படாததால், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக முதற்கட்டமாக 50 பைகளைப் பெற்றுப் பரிசோதிக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய, உள்நாட்டுக் கொள்வனவு மூலம் 50 கொலோஸ்டமி பைகள் பெறப்பட்டு தற்போது பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றில் இதுவரை எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு ஆரம்பத்தில் கொள்வனவு செய்யப்பட்ட முதலாவது தொகுதி கொலோஸ்டமி பைகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், அவை பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மேலதிக கொள்வனவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கொலோஸ்டமி பைகளைக் கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திர நடவடிக்கைகள் மருத்துவப் பொருட்கள் விநியோகப் பிரிவில் (MSD) தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக மருத்துவப் பொருட்கள் விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்திடம் கருத்தைப் பெற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

October 26, 2026
லங்கா ஐ.ஓ.சி ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையை அதிகரித்தது
செய்திகள்

லங்கா ஐ.ஓ.சி ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலையை அதிகரித்தது

October 26, 2026
மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது
உலக செய்திகள்

மீண்டும் பிரான்சில் வெடித்த போராட்டம்; சுமார் 1,000 பேர் கைது

October 25, 2026
ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது
செய்திகள்

ஞானசார தேரருக்கு ஆதரவான சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டது

October 25, 2026
ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!
செய்திகள்

ஒரு இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மதுபான போத்தல்கள் மீட்பு!

October 25, 2026
ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் வாங்க ஆரம்பித்தது அமெரிக்கா

October 25, 2026
Next Post
வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு