மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, வலான ஊழல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் உள்ள முழுமையான தரவுகளைப் பெற்று ஆய்வு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திணைக்களத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து, அவை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைப் பணிகளுக்கு தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவும் இணைந்துள்ளது.
இதன்படி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினிப் பீடப் பேராசிரியர்கள், இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT) அதிகாரிகள், GovTech இலங்கை மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆகியோர் விசாரணைகளில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








