ஹோமாகம பொலிஸ் காவலில் உயிரிழந்த இஷார ஹர்ஷ குமாரவின் இறுதிச் சடங்கில் உரையாற்றிய பௌத்த துறவி ஒருவர், சில பொலிஸ் அதிகாரிகள் சிறிய இலஞ்சங்களுக்காகத் தங்களது நேர்மையை விற்றுவிடுவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
“ஒரு போத்தல் சாராயத்திற்கும் ரூ.1,000 அல்லது ரூ.2,000 பணத்திற்கும் விற்பனைக்காகும் பொலிஸ் படையே நம்மிடம் உள்ளது” என அவர் தெரிவித்தார்.
மேலும், ஹோமாகம பொலிஸாரின் அத்துமீறல்கள் குறித்து ஒரு மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்ததாகவும் அவர் கூறினார்.
பொலிஸ் காவலில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய பொலிஸ் திணைக்களத்தையும் அரசாங்கத்தையும் விமர்சித்த அவர், இஷாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.








