Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்வரும் 9 ஆம் திகதி மற்றுமொரு போராட்டம்!

எதிர்வரும் 9 ஆம் திகதி மற்றுமொரு போராட்டம்!

3 years ago
in செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி சரவண ராஜா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை இலங்கை நீதித்துறைக்கு மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என வன்னி வலயச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நீதிபதி சரவணராஜாவுக்கு நீதி கேட்டு ஏற்பாடு செய்யப்பட்ட மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிபதி தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததுடன் தனது பதவி விலகல் கடிதத்தில் தனக்கு ஏற்பட்ட ஆச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக பதவி விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை கண்டித்து வடக்கு கிழக்கு சட்டத்தரணிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் கொழும்பு சட்டத்தரணிகளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி கொழும்பு அளுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னாள் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளோம்.

நீதிபதிக்காக நீதி கேட்டு இடம் பெறும் போராட்டங்களில் சட்டத்தரணிகள் என்ற வகையில் எமது வேலைகளை பகிஸ்கரித்து ஆதரவை வழங்குவோம்.

ஆகவே முல்லைத்தீவு நீதிபதிக்காக நீதி கேட்டு இடம்பெறும் போராட்டங்களில் பொது அமைப்புகளும் மக்களும் கலந்து கொண்டு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த மனித சங்கிலி போராட்டத்தில் வட மாகாணத்தைச் சேர்ந்த நீதிமன்றங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
அனைத்து இராணுவமும் என்னைச் சுற்றி திரளும்; சரத் பொன்சேகா!

அனைத்து இராணுவமும் என்னைச் சுற்றி திரளும்; சரத் பொன்சேகா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு