Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 198 பேர் உயிரிழப்பு!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 198 பேர் உயிரிழப்பு!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 198 பேர் கொல்லப்பட்டதுடன், 1,600 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலஸ்தீன போராளிகளின் முன்னோடியில்லாத தாக்குதலின் ஒரு பகுதியாக இருந்த “ஏவுகணை தாக்குதலுக்கு” பதிலடியாக காசா பகுதியில் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதாக இஸ்ரேல் முன்னதாக அறிவித்திருந்தது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை ஏவப்பட்டதை அடுத்து, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் இஸ்ரேல் ‘போரில் ஈடுபட்டுள்ளது’ என அறிவித்தார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றில் முதன்முறையாக பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது பாரிய வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தினர்.

இன்று காலை நடந்த தாக்குதலில் குறைந்தது 42 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 740 இஸ்ரேலியர்கள் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதேசமயம், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 198 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,610 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகனை வீசப்பட்டதைத் தொடர்ந்து, பாராகிளைடர்களைப் பயன்படுத்தி தரை, கடல் மற்றும் வான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த காசா போராளிகளை எதிர்த்துப் போராடுவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் தெருக்களில் திருடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை அணிவகுத்துச் செல்லும் காணொளிகளால் சமூக ஊடகங்கள் நிரம்பியுள்ளன.

ஊடுருவல்காரர்களுடன் தொடர்ந்து போரிட்டு வருவதால், உயிரிழப்புகள் அல்லது கடத்தல்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க இராணுவம் மறுத்துவிட்டது.

இன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான மோதலை குறைக்குமாறு சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை கண்டித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலுக்கு எதிரான காசாவில் இருந்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை உறுதியாகக் கண்டிக்கிறது” என்று ஜேர்மனி அறிவித்துள்ளது.

காசாவில் இருந்து சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டதையடுத்து, உக்ரைன் இஸ்ரேலுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!

September 23, 2026
பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?
செய்திகள்

பொதியிடப்படாத தேங்காய் எண்ணெய் விற்பனைக்கு தடை?

September 23, 2026
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேருக்கு நீண்டகால சிறைத்தண்டனை!

September 23, 2026
Next Post
மட்/ புனித மிக்கேல் கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம்!

மட்/ புனித மிக்கேல் கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விஜயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.