Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டக்ளஸ் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்யவேண்டும்; சாணக்கியன் எம்.பி!

டக்ளஸ் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்யவேண்டும்; சாணக்கியன் எம்.பி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினாக இருப்பதே சிறந்தது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய இழுவைப் படகு விடயம் குறித்து பிரதமர் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் எதிர்மறையான கருத்துகள் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் இந்திய இழுவை படகுகளுக்கு பாஸ் அடிப்படையில் அனுமதி வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். அதே நேரம் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு துளியேனும் இந்திய மீனவர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் அத்துமீறிய மீன்பிடி இடம்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இழுவைப்படகு இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமலல்லாது அவருக்கு மாதமொன்றுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் இலஞ்சம் கொடுப்பதாகவும் பாராளுமன்றத்திலே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சொல்லியிருந்தார். இவ்வாறு அவர் தொடர்பான விடயங்கள் இருக்கின்றன.

அந்த விடயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க டக்ளஸ் தேவானந்தா அவர்களை மீன்பிடி அமைச்சராக நியமித்ததற்கான காரணமே வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழர்களுக்கும் தென்னிந்தியாவில் இருக்கும் தமிழர்களுக்கும் முரண்பாடு வரவேண்டும், அதன் காரணமாக தென்னிந்திய முதலமைச்சருக்கோ, அரசியல்வாதிகளுக்கோ இலங்கையில் வடக்கு கிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் மீதான எதிரான சிந்தனை வரவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்ட வகையிலே டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது நான் அடிக்கடி சொல்லும் விடயம்.

கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உண்மையிலேயே வாயால் சொல்வது ஒன்று நடைமுறைப்படுத்துவது ஒன்று. அந்த அமைச்சிற்கு பொருத்தமில்லாத ஒருவர். அவர் மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது வேறு ஏதாவது அமைச்சுப் பொறுப்பை, எமது மாவட்டத்திலேயும் ஒரு திணைக்களம் கூட சுற்றுநிரூபம் வெளியிடப்படாத அமைச்சை வைத்திருக்கும் அமைச்சர்களைப் போல அவரும் ஏதாவது தன்னுடைய சலுகைகளை எடுக்கக் கூடிய வகையிலான அமைச்சைக் கேட்டெடுத்து பேசாமல் இருப்பதே பொருத்தம் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!
செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

August 3, 2026
கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!
செய்திகள்

கேகாலை கரடுபனையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் காயம்!

August 3, 2026
டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

டியூஷன் மாணவிகளை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இளைஞர்கள் கைது; 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

August 3, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து கருத்தரங்கு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு குறித்து கருத்தரங்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு