இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (14) ஆரம்பமாகியுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று (14) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் 2 தடவைகள் இந்த ஆரம்ப நிகழ்வு பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.