அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
அஸ்வசும நலன்புரி உதவித்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 11ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும்.
இதற்காக 2026ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அஸ்வசும திட்டத்தின் கீழ் தகுதி பெற்றிருந்தும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள நலன்புரிப் பிரிவு தொடர்பில் அதிருப்தி கொண்டுள்ள பயனாளிகளும் இந்தக் காலப்பகுதியில் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








