Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜனாதிபதி எதைச் சொன்னாலும் அவை எவையும் கிழக்கில் நடக்காது; சி.வி.விக்கினேஸ்வரன் விசனம்!

ஜனாதிபதி எதைச் சொன்னாலும் அவை எவையும் கிழக்கில் நடக்காது; சி.வி.விக்கினேஸ்வரன் விசனம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி ஜனாதிபதி எதைச் சொன்னாலும் அவை எவையும் கிழக்கில் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக் கேட்காமல்தான் செயற்படுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் விசனம் தெரிவித்துள்ளார்.

நாளைய தினத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நேற்று நடாத்தியிருந்தன.

சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

ஆக, ஜனாதிபதி எதைச் சொன்னாலும் அங்கு எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக்
கேட்காமல்தான் செயற்படுகிறார்கள். குறிப்பாக ஆக்கிரமிப்பு காணிகளை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொன்ன பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் இன்றைய நிலைமையை அனைத்துத் தரப்பினர்களுக்கும் உணர்த்தும் வகையில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள நாம் அனைவருமாக இணைந்து ஹர்த்தால் செய்வதற்குத் தீர்மானித்து உள்ளோம்.

மட்டக்களப்பிற்கு சென்று கட்சி உறுப்பின்ர்களைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் மயிலத்தமடுவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்தும் கலந்துரையாடியிருந்தேன்.

அதன் போது அங்குள்ள பல்வேறு விடயங்களைத் தெரிந்து கொண்டிருந்தேன். அந்த மக்களின் கால்நடைகளை அல்லாமல் செய்து, அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமித்து, சிங்கள மயமாக்குகின்ற வகையில் தொடர்ந்தும் பல்வேறு வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக மிக மிக மோசமான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபாய நிலைமையில் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த மாவட்டத்திற்கு சென்ற போதும் அவர்களைச் சந்திக்காமலேயே சென்றிருக்கின்றார்.

இவ்வாறான நிலைமையில் சில தினங்களிற்கு முன்னர் அங்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்க வேண்டுமென்று அறிவித்திருக்கின்றார்.

ஆனால் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு வந்த பின்னர் கூட அங்கிருந்த தமிழ் மக்களின் வாடிகள் எரிக்கப்பட்டமை மாத்திரமல்லாமல், அங்கு தமிழ் மக்கள் போக முடியாதவாறு அச்சுறுத்தல் விடுத்து, அவர்களை விரட்டி அனுப்புகின்ற நிலைதான் உள்ளது.

ஆக, ஜனாதிபதி எதைச் சொன்னாலும் அங்கு எதுவும் நடக்காது என்ற நிலைமைதான் காணப்படுகிறது. அங்கு திட்டமிட்ட செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிற போது ஜனாதிபதி எதனைக் கூறினாலும் அதைக் கேட்காமல்தான் செயற்படுகிறார்கள்.

குறிப்பாக ஆக்கிரமிப்பு காணிகளை விடுவிக்க வேண்டுமென்று ஜனாதிபதி சொன்ன பின்னரும் அங்கு முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் பௌத்த விகாரை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீது அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால் பலரும் வெளிநாடுகளுக்கே சென்று விடுவார்கள். ஆக மொத்தத்தில் அரசு திட்டமிட்ட வகையில் தன்னுடைய நடவடிக்கைகளைச் செய்தால் இப்படி தமிழ் மக்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு சென்றால் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று சொல்லுகிற நிலைமை இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.