Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களை ஹர்த்தாலுக்கு அழைத்துவிட்டு தமது கருமங்களை செய்ய சென்ற தமிழ் எம்.பிக்கள்!

தமிழ் மக்களை ஹர்த்தாலுக்கு அழைத்துவிட்டு தமது கருமங்களை செய்ய சென்ற தமிழ் எம்.பிக்கள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் கட்சிகளால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் நேற்றையதினம்(20) ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஹர்த்தாலை புறந்தள்ளி தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு விடுத்த அச்சுறுத்தல் மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல்தரை அபகரிப்பு போன்ற தமிழர் பகுதி ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றையதினம் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் தமிழ் தேசிய கட்சிகளின் அழைப்பை ஏற்று நேற்றையதினம் வடக்கு கிழக்கு எங்கும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், மக்களை வேலைகளை பகிஷ்கரித்து பூரண ஹர்தாலை அனுஷ்டிக்கும்படி வேண்டுகோள் விடுத்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

நேற்றைய ஹர்த்தாலால் வர்தகர்கள் , ஓட்டோ சாரதிகள், தனியார் பஸ் சாரதிகள், தொழிலாளர்கள் முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வேண்டி தமது வேலைகளைப் பகிஷ்கரிப்பு செய்ய அறிக்கைவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தானே அந்த வேண்டுகோளை மீறி பாராளுமன்றம் சென்றமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதன் காரணமாக அவர்மீது தமிழரசுக் கட்சி கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா? என கட்சித் தலைவரான மாவை.சேனாதிராஜாவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.

ஊருக்கு உபதேசம் தனக்கு இல்லை என்றவகையில் தமிழ் பொதுமக்களுக்கு ஒருநீதி, தமிழரசுக்கட்சித் தலைவர்களுக்கு ஒரு நீதியா? என சமூகவலைத்தளங்களில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதேவேளை முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது
செய்திகள்

மஹர சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்கிறது

August 2, 2026
வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
செய்திகள்

வடக்கில் 7,606 கட்டாக்காலி நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

August 2, 2026
Next Post
வடக்கு ரயில் சேவைகளில் நேர மாற்றம்!

வடக்கு ரயில் சேவைகளில் நேர மாற்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.