Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் திடீர் திருப்பம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் திடீர் திருப்பம்!

3 years ago
in செய்திகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் முக்கியமாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்னும் சாரா ஜஸ்மின் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சாய்ந்தமருதில் உள்ள பாதுகாப்பான இல்லத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சாரா ஜாஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் அடங்குவதாக மரபணு பரிசோதனையில் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த 15 பேரின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்திய போது, கட்டுவாப்பிட்டி தேவாலய குண்டுதாரியான அச்சி முஹம்மது ஹஸ்துனின் மனைவியான சாரா ஜாஸ்மின் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேசத்தில் தலைமறைவாகி தங்கியிருந்த வீட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் வகையில் குற்றவியல் விசாரணை நிபுணர்களால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

புலஸ்தினி மகேந்திரனின் தாயாரிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட மரபணு மாதிரி மற்றும் குற்றம் இடம்பெற்ற இடத்திலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரி ஆகியன தாய்க்கும் மகளுக்கும் இடையில் உள்ள உயிரியல் ரீதியான தொடர்பை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புலஸ்தினி மகேந்திரனுக்கும் அவரது தாயாரான ராஜரத்னம் கவிதாவிற்கும் இடையிலான தொடர்பு 99.9999 சதவீதம் உறுதியாகியுள்ளதாக அரச பகுப்பாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது எனவும் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்
அரசியல்

“தமிழரசு கட்சி கூப்பிட்ட இடத்தில் குந்துகின்ற கட்சி அல்ல”; சி வி கே சிவஞானம்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
Next Post
வாளால் வெட்ட வந்தவர் மீது பொலிஸ் துப்பாக்கிப்பிரயோகம்!

வாளால் வெட்ட வந்தவர் மீது பொலிஸ் துப்பாக்கிப்பிரயோகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு